Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ….இந்திய மகளிர் அணியில் ஷபாலி வர்மா இடம்பிடித்தார் …!!!

இங்கிலாந்துக்கு எதிரான விளையாட உள்ள டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணியில்  ஷபாலி வர்மா இடம்பிடித்துள்ளார் .

இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், இந்திய மகளிர் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒரு டெஸ்ட் போட்டியிலும் 3 ஒருநாள் தொடர் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெறும்  டெஸ்ட் போட்டியானது , வருகின்ற ஜூன் 16ஆம் தேதி பிரிஸ்டலில் நடக்க  உள்ளது. இதைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் ஜூன் 27 ஜூன் 30 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளிலும் மூன்று  டி20 தொடர்கள் ஜூலை 9, 11 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இந்திய மகளிர் அணியின் நீது டேவிட்  தலைமையிலான, தேர்வுக்குழு தேர்வு செய்து அறிவித்துள்ளது. குறிப்பாக மகளிர் அணியில் டி20 போட்டிகளில்  அதிரடி வீராங்கனையான 17 வயது ஷபாலி வர்மா முதல்முறையாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரில் இடம் பிடித்துள்ளார்.

அதேபோல் கடந்த மார்ச் மாதத்தில் தென்னாபிரிக்காவிற்கு  எதிரான ,ஒருநாள் மற்றும் டி20 போட்டியின்போது , அணியிலிருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளரும் ,ஆல்ரவுண்டருமான ஷிகா பாண்டே மற்றும் சுழற்பந்து வீராங்கனையான  எக்தா பிஷ்த் ,இவருடன் விக்கெட் கீப்பரான தானியா பாட்டியா  ஆகிய வீராங்கனைகள் மூன்று வடிவிலான போட்டியிலும் இடம்பிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பரான இந்திராணி ராய்  புதுமுக வீராங்கனையாக இடம்பிடித்துள்ளார். முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ஸ்னே ராணா, தற்போது அதிலிருந்து மீண்டு 5 ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் அணியுடன் இணைகிறார். கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட ,சுழல் பந்துவீச்சாளர் ராஜேஸ்வரி கெய்க்வாட், தொற்றிலிருந்து மீண்டாலும் , அவர் அணியில் இடம்பெறவில்லை.எனவே இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் அணியின் கேப்டனாக மிதாலி ராஜூம் , டி 20 தொடரில் ஹர்மன்பிரீத் கவுரும்  கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார் .

Categories

Tech |