Categories
மாநில செய்திகள்

இன்ஜினியர் மாணவர்களே…. 1 மணி நேர தேர்வு….. 30 பதில்கள் போதும்….. வெளியான தகவல்….!!

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதாலும், மாணவர்களை இந்த சூழ்நிலையில் தேர்வெழுத அனுமதித்தால், அது பாதிப்பை பல மடங்கு அதிகரித்துவிடும் என்பதற்காகவும் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேபோல்,

இறுதியாண்டு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஒரு மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் மேலும் இறுதி செமஸ்டர் தேர்வில் மொத்தம் 40 கேள்விகள் கேட்கப்படும். அதில் 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள் பதில் அளித்தால் போதுமானது என்றும் தெரிவித்துள்ளது. 

Categories

Tech |