17 வயது சிறுமியை எஞ்சினியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் கிருஷ்ணன் என்ற என்ஜினியர் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் கிருஷ்ணன் 17 வயது சிறுமியிடம் பேசி வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்று அந்த சிறுமியை கிருஷ்ணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் கிருஷ்ணன் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.