Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீர்னு இப்படி ஆகிட்டு…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கடலூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு கட்டையின் மீது மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு திட்டு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரிங் பட்டதாரியான பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்ற பிரபாகரன் தனது நண்பர்களைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து நல்லான் பட்டினம் கிராமத்தில் இருக்கும் வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது திடீரென பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விட்டது.

இதனால் அவரின் மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்பு கட்டைகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபாகரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |