Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொடூரமான சம்பவம்… தலை துண்டாகி இறந்த இன்ஜினியர்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் சந்தோஷ் குமார் என்ற சிவில் இன்ஜினியர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் போச்சம்பள்ளியில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து இவர் அக்கம்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே வேகமாக வந்த மினி லாரி சந்தோஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சந்தோஷ் குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மினி லாரி டிரைவரான அண்ணாதுரை என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |