மின்சாரம் தாக்கி இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவில் இன்ஜினியராக இருக்கிறார். இந்நிலையில் பிரகாஷ் பாரிவாக்கத்தில் இருக்கும் காவலாளிகள் தங்கும் குடிசையில் மின்விசிறி பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.