Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. இன்ஜினியரின் தண்டனை உறுதி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலப்பாடி பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான கருப்பையா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கருப்பையா அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருப்பையாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கருப்பையாவுக்கு 3000 ரூபாய் அபராதமும், 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்பின் ஜாமினில் வெளியே வந்த கருப்பையா பெரம்பலூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் கருப்பையா மேல்முறையீடு செய்து மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட் பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால் காவல்துறையினர் கருப்பையாவை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |