Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரி இப்படி செய்யலாமா….? பெண் அளித்த புகார்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய மின்வாரிய இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயந்தி தனக்கு சொந்தமான இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் மின்கம்பத்தை தள்ளி வைக்க கோரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த மின்வாரிய உதவி இன்ஜினியர் சுரேஷ் பாபு என்பவர் அதற்கு லஞ்சமாக 23 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் ஜெயந்தி புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினரின் அறிவுரைப்படி ஜெயந்தி மின்வாரிய உதவி என்ஜினீயர் சுரேஷ்பாபுவிடம் 23 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அந்த சமயம் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சுரேஷ்பாபுவை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |