இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி அம்பேத்கர் புரட்சி நகர் பகுதியில் இன்ஜினீயரான மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மூர்த்தி சுமித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கந்தன்சாவடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த மூர்த்தி வேறு வேலை தேடி வந்துள்ளார். ஆனாலும் தகுந்த வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மூர்த்தி தனது மனைவியை அவரது அக்கா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பிறகு மூர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.