என்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், 5 மாதத்தில் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திகை தீப பண்டிகையை முன்னிட்டு பத்மாவதி தனது பெற்றோரை பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து செல்போன் மூலம் பத்மாவதியை தொடர்பு கொண்ட தமிழரசன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதற்கு குழந்தைக்கு 10 மாதத்தில் போடவேண்டிய தடுப்பூசியை போட்டு கொண்ட பிறகு வீட்டிற்கு வருகிறேன் என பத்மாவதி கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழரசன் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு தனது மனைவியிடம் செல்போன் மூலம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனையடுத்து கீழப்பெரம்பலூர் ஏரிக்கரையோரம் மயங்கி கிடந்த தமிழரசனை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.