Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

செல்போன் கேட்டு தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய மிளகுபாறை பகுதியில் ஞானவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இதனை அடுத்து புதிதாக செல்போன் வாங்கி தருமாறு தமிழ்ச்செல்வன் தனது பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார்.

அதன்பின் மன உளைச்சலில் இருந்த தமிழ்ச்செல்வன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழ்செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |