தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் 54 சதவீத இடங்கள் காலியாகவும், 16 தனியார் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 1,67,000 பொறியியல் இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 3-ம் தேதி முதல் தொடங்கிய நிலையில் 4 கட்ட கலந்தாய்வு முடிந்தது . பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு துணை கவுன்சிலிங் நேற்று தொடங்கிய நிலையில் 4 கட்ட கலந்தாய்வில் மொத்தம் 11 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 2 தனியார் கல்லூரிகளிலும் மட்டுமே இடங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
மீதமுள்ள 479 கல்லூரிகளில் 54 சதவீத இடங்கள் காலியாக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 230 கல்லூரிகளில் 30 விழுக்காட்டிற்கும் கீழ் மட்டுமே இடங்கள் நிரம்பியுள்ளது .