Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் வந்த நண்பர்கள்… கட்டுப்பாடின்றி வந்த லாரி… தூக்கி வீசப்பட்ட இறுதியாண்டு மாணவர்…!!

லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் உள்ள பாடி மதியழகன் நகரில் முகமது இப்ராகிம் என்பவர் வசித்து வருகிறார். முகமது இப்ராகிம் வண்டலூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார் .இந்நிலையில் இப்ராகிம் மற்றும் இவருடைய நண்பர் கௌதம் என்பவரும் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அச்சமயம் அதே வழியில் கட்டுப்பாடின்றி வந்த லாரி ஒன்று இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட இப்ராஹிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். ஆனால் அவரது நண்பர் கவுதம் சிறிய காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |