Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனே வழங்குங்க… பெண்களின் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு….!!

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜாபுதுக்குடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு கோவில்பட்டிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில மாதங்களாகவே இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அந்த மனுவிற்கு அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ராஜாபுதுக்குடி வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து காலிக்குடங்களுடன் அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த உதவி கலெக்டர் சங்கரநாராயணன், துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் செந்தூரப்பாண்டி மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் தங்களின் பகுதிக்கு கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வினியோகிக்க படாமல் இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றோம் என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட அதிகாரிகள் தங்களின் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகி விடுகின்றது என்று தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்பட தாமதமாவதாக என  தெரிவித்ததோடு புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து மின்சார பற்றாக்குறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சீவலபேரி பகுதியிலிருந்து உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக உறுதியளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Categories

Tech |