Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு உதவி பண்ணுங்க” பெற்றோரை இழந்த சகோதரிகள்… மாவட்ட ஆட்சியாளரின் அதிரடி உத்தரவு…!!

பெற்றோரை இழந்த சகோதரிகள் அரசின் நிவாரண உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டி.களத்தூர் பகுதியில் பானுப்பிரியா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபேதா, சந்தியா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மாதம் பானுப்பிரியா உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் இவரின் இரண்டு மகள்களும் தனது தாத்தா, பாட்டியிடம் தற்போது வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுபேதா மற்றும் சந்தியா ஆகிய 2 சிறுமிகளும் மாவட்ட ஆட்சியாளரான ஸ்ரீ வெங்கடபிரியாவை சந்திப்பதற்காக மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் 2 பேரையும் சந்திக்க அனுமதி அளித்துள்ளார்.

இதனையடுத்து சந்தியா மற்றும் சுபேதா ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் தனது தந்தை இறந்து விட்டார். அதனால் தாயான பானுப்பிரியா கூலி வேலை செய்து  தங்களைப் படிக்க வைத்து பராமரித்து வந்துள்ளார். ஆனால் கடந்த மாதம் உடல்நலக் குறைவால் தங்களது தாயாயும் இறந்து விட்டதால் சிறுமிகளான இருவரும் தாத்தா பாட்டியின் பராமரிப்பில் தற்போது வளர்ந்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் மாவட்ட ஆட்சியாளரிடம் தங்களது தாயின் இறப்பு சான்றிதழ் மற்றும்  எங்களுக்கு வாரிசு சான்றிதழ் வாங்கி தர வேண்டும் எனதெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தங்களின் தாத்தா-பாட்டி இருவருக்கும் வயதாகிவிட்டதால் எங்களை பராமரிப்பதற்கும், படிக்க வைப்பதற்கும் அவர்களிடம் போதிய வசதி இல்லை எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து நாங்கள் இருவரும் அரசின் நிவாரண உதவி பெற்று மேல் படிப்பு படிப்பதற்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இந்த சிறுமிகள் மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியாளர் உடனடியாக இது தொடர்புடைய அதிகாரிகளை அழைத்து இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சுபேதா மற்றும் சந்தியா ஆகிய இருவரும் இணைந்து மாவட்ட ஆட்சியாளருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |