வீட்டில் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற மனைவி காலையில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் குறிச்சி பகுதியில் பாரதிராஜா என்பவர வசித்து வருகின்றார். இவருக்கு பொன்னுமணி என்ற மனைவி இருக்கின்றார். இதனையடுத்து பாரதிராஜாவும் பொன்னுமணியும் இரவு நேரத்தில் தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்று உள்ளனர்.
இந்நிலையில் பாரதிராஜா காலையில் எழுந்து பார்த்தபோது பொன்னுமணி வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதிராஜா உறவினர் அக்கம்,பக்கத்தில் உள்ள வீடுகள் போன்ற பல்வேறு இடங்களில் பொன்னுமணியை தேடி பார்த்துள்ளார். ஆனால் பொன்மணியை கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் பாரதிராஜா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிந்த போலீசார் பெண்ணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.