இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் பேத்தியும் இளவரசியுமான சாராவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் குடும்பம் அரண்மனையில் வசித்து வருகிறது. எலிசபெத்திற்கு மகன், மகள்,பேரன், பேத்தி, கொள்ளு பேரன் ,கொள்ளு பேத்தி, போன்ற அனைவரும் அரண்மனையில் வசித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுக்கு முன்னரே இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும் இளவரசியுமான சாராவுக்கும் அந்நாட்டை சேர்ந்த ரக்பி வீரர் மைக் டின்டால் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு தற்போது ஒரு மகனும்(7) மகளும்(2) உள்ளனர்.
இந்நிலையில் அவர் 3முறையாக மீண்டும் கர்ப்பமாக இருந்தார் . அ வர் அரண்மனையின் குளியலறையில் குளித்துக் கொண்டு இருந்தபோது திடீரேன பிரசவ வலி ஏற்பட்டது. அதனால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அவருக்கு குளியல் அறையிலேயே ஆண் குழந்தை பிறந்து உள்ளது . அந்தக் குழந்தைக்கு லூகாஸ் பிலிப் டின்டால் என்று பெயர் சூட்டிஉள்ளனர் . இந்தக் குழந்தை இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு 10-வது கொள்ளுப்பேரன்ஆவான்.