Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எங்கள் வழி  தனி வழி”…. ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு குடைச்சல்…. ஜெய்ஆனந்த் ஓபன் டாக்…!!

மயிலாடுதுறையில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மாவட்ட செயலாளரான சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் அணி செயலாளரான ஜெய்ஆனந்த் திவாகரன் பங்கேற்றார். அப்போது அங்கு இருந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு ஜெய்ஆனந்த் திவாகரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து பி.எட். பயிலும் ஒரு திருநங்கைக்கு ரூபாய் 20,000 கல்வி உதவித்தொகையை ஜெய்ஆனந்த் வழங்கினார்.

அதன்பின் ஜெய்ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது “ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தமிழ்நாட்டில் மோசமான அரசியல் சூழ்நிலை உருவாகி வருகிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு சிறிது நாட்கள் ஆகும். ஆகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொந்தங்கள் ஆகிய நாங்கள் விரைவில் எங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து நமது நாட்டை நல்ல திசையில் கொண்டு செல்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

எனவே எங்கள் வழி  தனி வழி ஆகும். மேலும் பலனை எதிர்பாராது எங்களின் கடமைகளைஆற்றுவோம்” என்று  கூறினார். இதுபோன்று திவாகரன் மகனான ஜெய்ஆனந்த் சொல்லி இருப்பதை வைத்து பார்க்கையில் அதிமுகவை கைப்பற்ற சசிகலா மேற்கொள்ளும் போரில் அவர் யுத்த வீரராக தோள் கொடுப்பது வெளிப்படையாக தெரிகிறது. இவர்கள் நடத்தும் போர் அதிமுகவில் எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. எனினும் அதிமுக ஆட்சி சசிகலாவின் கைக்கு வரும் வரையிலும் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு குடைச்சல் இருந்து கொண்டே இருக்கும் என்பது மட்டும் திட்டவட்டமாக தெரிகிறது.

Categories

Tech |