இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனவைரஸ் தற்போது இங்கிலாந்திலும் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவிலிருந்து கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று பல கோடி மக்களின் உயிரை சூறையாடியது. மேலும் மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டு நாடு முழுவதும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்ததால் தொற்றின் பாதிப்பு குறைந்து தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை சுனாமி போல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் இப்பொழுது வரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து உள்ளார்கள். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்திலும் இந்தியாவில் மருத்துவர்களால் கண்டறியப்பட்ட புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் பி1.617 பரவி வருவதா கூறியுள்ளனர்.
இந்த வகை பி1.617 என்ற உருமாறிய கொரோனா வியூஐ (ஆய்வின் கீழ் உள்ள உருமாறிய கொரோனா பாதிப்பு) பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது கூறியுள்ளனர். மேலும் இங்கிலாந்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இங்கிலாந்தில் 73 பேருக்கும் ஸ்காட்லாந்தில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து ஏற்கனவே 4 நாடுகளை இங்கிலாந்திற்கு நுழைய தடை விதித்து சிவப்புப் பட்டியலில் சேர்த்திருந்தது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவுவது தொடர்ந்து கொண்டிருந்தால் இந்தியாவையும் சிவப்புப் பட்டியலில் சேர்ப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
.