Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து அணியில் 7 பேருக்கு கொரோனா…. களமிறங்கும் புதிய அணி …. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு முடிவு …!!!

பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டி  வருகிற 8-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில்,  இங்கிலாந்து அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது  .

இங்கிலாந்துக்கு எதிராக  பாகிஸ்தான் அணி  மூன்று  ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு  அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 8ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அணியின் வீரர்கள்  3 பேர் , நிர்வாக உறுப்பினர்கள் 4 பேர்  உட்பட மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் வீரர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் . இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்விக்கு , நிச்சயம் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் போட்டு  புதிய அணியை இறக்க திட்டமிட்டுள்ளது . அத்துடன் இந்த புதிய அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |