Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ‘ஹண்ட்ரட்’ தொடரில்… இந்திய வீராங்கனைகள் 5 பேர் ஒப்பந்தம் …!!!

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நடத்தும் ‘ஹண்ட்ரட்’ என்ற தொடரில் இந்திய வீராங்கனைகள் 5 பேர் விளையாட உள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சார்பில் ‘ஹண்ட்ரட்’ என்ற தொடர் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த  தொடரானது பல்வேறு தடைகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு கோடைகாலத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக, இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் வீராங்கனைகளான  ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா உட்பட 5 வீராங்கனைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஹர்மன்பிரீத் கவுர் மான்செஸ்டர் ஒரிஜனல்ஸ் அணியிலும், ஸ்மிரி மந்தனா சவுத்தன் பிரேவ்  அணியிலும் மற்றும் ஷபாலி வர்மா பர்மிங்காமல் போனிக்ஸ் அணியிலும் விளையாட உள்ளனர். எனவே இந்த ‘ஹண்ட்ரட்’ தொடரில், இந்திய அணி விளையாடுவதற்காக பிசிசிஐ சார்பில் தடையில்லா சான்றிதழ்  வழங்கியுள்ளது. அதோடு தீப்தி ஷர்மா, ஜெர்மையா ரோட்ரிக்ஸ் ஆகிய  இரு வீராங்கனைகளும் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

Categories

Tech |