இங்கிலாந்து அரசு, இந்தியாவிற்கு விதித்த பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனவே, இங்கிலாந்து அரசு, கடந்த மே மாதம் இந்தியாவிற்கு பயணக்கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. தினசரி தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
எனவே, இங்கிலாந்து, இந்தியாவின் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவிலிருந்து வரும் தங்கள் மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியிருந்தால், தனிமைப்படுத்த தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது.