பிரித்தானிய எலக்ட்ரீஷியன் பிணவறையில் உள்ள சடலங்களுடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியின் Tunbridge Wells நகரில், கடந்த 1987 ஆம் ஆண்டு 2 இளம்பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இவர்களின் பெயர் Wendy Knell (25) மற்றும் Caroline Pierce (20) ஆகும். இந்த இரு பெண்களும் 5 மாத இடைவெளியில் கொல்லப்பட்டு, அவர்கள் இருப்பிடத்தில் இருந்து ஒரு மைல் தூரத்தில் ஆடைகளின்றி பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். இதன் பின் நடந்த உடற்கூராய்வில், இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் 34 ஆண்டுகள் கழித்து கடந்த டிசம்பர் மாதம் David Fuller (67) என்ற எலக்ட்ரீஷியன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், வழக்கு இந்த மாதம் நீதிமன்ற விசாரணைக்கு வருகின்ற நிலையில், David Fuller கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் செய்த திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் வெளிவந்தது.
தற்போது, போலீசார் அவரது முகவரியில் நடத்திய சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஹார்டு டிரைவ் மற்றும் புகைப்படங்கள் சிக்கின. அவற்றை ஆய்வு செய்ததில், டேவிட் வேலை பார்த்த கென்ட், சசெக்ஸ் மற்றும் டன்பிரிட்ஜ் வெல்ஸ் ஆகிய மருத்துவமனை பிணவறைகளில், சடலங்களுடன் உடலுறவு கொண்டு அதனை புகைப்படங்கள் எடுத்து வீட்டில் சேமித்து வைத்தது அம்பலமாகியது. இதனால், வழக்கின் விசாரணையை போலீசார் மேலும் நீட்டித்துள்ளனர்.