இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் 3 வது நாள் ஆட்டத்தில், மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள லார்ட்சில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 378 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. குறிப்பாக நியூசிலாந்து அணியின் அறிமுக வீரரான டிவான் கான்வே அதிரடி காட்டினார் . அவர் 200 ரன்களை அடித்து விளாசி அவுட்டானார். இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட், மார்க் வுட் 3விக்கெட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட் ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றினர் .
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 18 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரோரி பர்ன்சும், கேப்டன் ஜோ ரூட் இருவரும் சரிவை தடுத்து நிறுத்தினர். 2-வது நாள் முடிவில் 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்திருந்தது. அணியின் கேப்டன் ஜோ ரூட் 42 ரன்கள் ,பர்ன்ஸ் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த நிலையில் 3 வது நாளான நேற்று ,போட்டி தொடங்குவதற்கு முன்பு மழை கொட்டித்தீர்த்ததால் போட்டி ரத்தானது.