இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி 4 நாள் பயணமாக இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி கொண்டிருப்பதால் அவர் அந்த பயணத்தை ரத்து செய்துள்ளார். மேலும் இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி கொண்டிருப்பதால் போரிஸ் ஜான்சன் இந்தியா செல்ல முடியாது. அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான எதிர்கால கூட்டாண்மைகான திட்டங்களை ஒப்பந்தம் செய்ய தொடங்குவது குறித்து இந்த மாத இறுதியில் காணொலிக் காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
அதன்பின் அவர்கள் வழக்கமான தொடர்பிலிருந்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் நேரில் சந்திக்க எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரும் 25-ஆம் தேதி முதல் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதாக டெல்லி மாநில முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.