இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தை பொங்கல் திருநாளான இன்று தனது வாழ்த்துகளை தமிழில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர். இந்த சமயத்தில் பிரிட்டன் நாட்டில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தமிழில் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “வணக்கம் பிரிட்டனில் வசித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். இயற்கை அளித்துள்ள கொடைக்கு நன்றி செலுத்தும் வகையில் சிறப்பான முறையில் தைப்பொங்கலை பொங்கலிட்டு கொண்டாடுங்கள். கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும்போது சிறந்த முறையில் பங்களிப்பை அளித்துள்ள தமிழ் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி” என கூறியுள்ளார்.