Categories
உலக செய்திகள்

பெண் குழந்தையை பெற்ற இளவரசி…. மகிழ்ச்சி வெள்ளத்தில் ராஜ குடும்பம்…. குவியும் வாழ்த்து மழை….!!

பிரித்தானிய இளவரசியான பீட்ரைஸ் மற்றும் அவரது கணவர்  மோஸ்ஸிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியான, இளவரசி பீட்ரைஸ் மற்றும் அவரது கணவர் எடோர்டோ மாபெல்லி மோஸ்ஸி தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பிறந்த குழந்தை 2.7 கிலோ எடையில் உள்ளதாகவும் லண்டனிலுள்ள செல்சியா மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 11.42 மணிக்கு பிறந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதனையடுத்து பிறந்த குழந்தையானது பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் 12 வது கொள்ளுப் பேத்தி ஆவார். மேலும் இந்த குழந்தை தனது தாய்க்கு பின்னால் 11 ஆவதாக  சிம்மாசனத்தில் இடம் பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்து தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் ராஜ குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் பீட்ரைஸ் மற்றும் அவரது கணவரான ஏடோர்டோ மாபெல்லி மோஸ்ஸி தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Categories

Tech |