இங்கிலாந்து சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்காக மனநல ஆலோசகர் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் தள்ளிவைக்கப்பட்டதோடு, ஜூலை 23-ஆம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்கும் பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மனநல ஆலோசகர்கள் குழு ஒன்று இங்கிலாந்து சார்பில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் தங்கள் நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இங்கிலாந்து அரசு சார்பில் இந்த குழுவில் ஒரு மருத்துவர், ஒரு விளையாட்டு உளவியலாளர், 10 மனநல ஆலோசகர் ஆகியோர் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரிட்டிஷ் ஆர்தோபெடிக் அசோசியேஷன், தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் வீரர்களுடைய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், விளையாட்டு வீரர்களின் மனநிலை நல்ல நிலையில் இருப்பதற்காகவும் இந்த குழு செயல்படும் என்று தெரிவித்துள்ளது.