இங்கிலாந்து அணி 12 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 72 ரன்களுடன் விளையாடி வருகிறது
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் களமிறங்கினர்.
இம்ரான் தாஹிர் வீசிய முதல் ஓவரில் 2 வது பந்தில் பேர்ஸ்டோ 0 ரன்னில் வெளியேறினார். அதன் பிறகு ஜோ ரூட்டும், ஜேசன் ராயும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது இங்கிலாந்து அணி 12 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 72 ரன்கள் குவித்துள்ளது. ராய் 33 (32) ரன்களிலும், ரூட் 38 (39) ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.