Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்காத இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்!

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறாதது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபேப் 4 என அழைக்கப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் ஒருவருக்கொருவர் பேட்டிங்கில் போட்டியிட்டு ரன்களை சேர்ப்பர். இதனால் இவர்களிடையேயான ஒப்பீடு எப்போதும் சமூக வலைதளங்களில் நடந்துகொண்டே இருக்கும். இந்த நால்வரும் அந்தந்த அணிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, இந்த வீரர்களின் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

Image

அதை இந்திய கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், பந்தை சேதப்படுத்திய புகாரில் இருந்து மீண்டுவந்த ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் அசாத்தியங்களை செய்து வரும் நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் மட்டும் கேப்டன்சி பிரஷரில் இருந்து மீண்டுவர முடியாமல் தவித்து வருகிறார்.

Image result for Joe Root test match"

2014ஆம் ஆண்டு முதல் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் டாப் 10 இடங்களுக்குள் இருந்த ஜோ ரூட், தற்போது அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் ஃபேப் 4 வீரர்கள் என்ற அடைமொழிக்கேற்ப விளையாடாத ஜோ ரூட்-ஐ நீக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

Image

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், விராட் கோலி இரண்டாமிடத்திலும், வில்லியம்சன் மூன்றாமிடத்திலும் உள்ளனர். ஆனால் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 11ஆவது இடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டில் ஜோ ரூட்-ன் ஆவரேஜ் மட்டும் 40-லிருந்து 27 ஆக குறைந்துள்ளது.

Image result for Joe Root test match"

நடந்துமுடிந்த ஆஷஸ் தொடரில் தோல்வியை தழுவியதோடு, நியூசிலாந்து தொடரிலும் பெரிதும் பேட்டிங்கில் சோபிக்காமல் இருப்பது கேப்டன்சி குறித்து பேச்சைத் தொடங்கியுள்ளது. கேப்டன்சியால் தான் ரூட்-ன் பேட்டிங்கில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.

Categories

Tech |