Categories
உலக செய்திகள்

தொடர்ந்து சிக்கும் சமூக வலைத்தளம்…. வெளிவந்த சுயவிவரங்கள்…. அபராதம் விதித்த பிரபல நாடு….!!

முகநூல் பயன்பாட்டாளர்களின் சுயவிவரங்கள் வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் அதிக அளவு வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், போன்ற சமூக  வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அதில் முகநூல் செயலியும் முக்கியமானதாகும். இந்த செயலியை பயன்படுத்துவோரின் சுய விவரங்கள் சேமித்து வைக்கப்படுகிறது. அதன் பாதுகாப்பிற்கு முகநூல் நிறுவனமே பொறுப்பாகும்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் முகநூல் பயன்பாட்டாளர்களின் சுயவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக இங்கிலாந்து அரசு அந்த நிறுவனத்திற்கு 50 மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து அரசின் உத்தரவை வேண்டுமென்றே முகநூல் நிறுவனம் பூர்த்தி செய்ய தவறிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |