Categories
உலக செய்திகள்

குழந்தைகளை கொன்ற அரக்கன்…. தாயின் காதலன்…. தந்தையின் உருக்கமான தகவல்….!!

இங்கிலாந்தில் ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகளை கொன்றவனை போலீசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்

இங்கிலாந்தில் உள்ள Derbyshireல் Terri Harris என்னும் பெண் தனது குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். இதனையடுத்து Terri மற்றும் அவரின் குழந்தைகள் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெண் நால்வரும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

இது குறித்து இறந்த குழந்தைகளின் தந்தையான  Jason Bennett இணையத்தில் மனதை உருக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலிருந்து தான் இறந்த குழந்தைகளின் பெயர் John மற்றும் Lacy என்று தெரிய வந்துள்ளது. அதிலும் Jason Bennetடும் Terri Harrisசும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதனால் குழந்தைகள் இருவரும் தாயுடன் இருந்துள்ளனர்.

குறிப்பாக Terri  தனியாக வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு Damien Bendall என்பவரை காதலித்துள்ளார். அந்த Damien தான் Terri , குழந்தைகள் மற்றும் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுமியான Connie Gent ஆகியோரை கொலை செய்துள்ளான் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக தனது குழந்தைகளை இழந்துவிட்டு ஒரு பக்கம் Jason அழுது கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் விளையாடப்போன குழந்தை அநியாயமாக கொல்லப்பட்டதை நினைத்து Connieயின் தந்தை கதறுகிறார். அதிலும் ஏன் எதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

Categories

Tech |