மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரிசப் பன்ட் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 87 ரன்களை குவித்ததை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் 3-ஆவது லீக் போட்டி மும்பை வான்கேட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி களமிறங்கி விளையாடியது. டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ரிசப்பன்ட் கடைசி கட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடி மும்பை பந்து வீச்சை நொறுக்கி தள்ளினார். ரிஷப்பன்ட் 78 (27) ரன்கள் (7 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார்.
இந்நிலையில் ரிஷப்பன்ட்டின் இந்த அதிரடி ஆட்டத்தை கண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், வெறும் 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்ததை குறிப்பிட்டு புகழ்ந்து தள்ளினார். இவ்வளவு அருமையாக விளையாடும் ரிஷப் பன்டை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்வது ஏன் என்பது பற்றி தனக்கு ஒன்றும் புரியவில்லை எனவும் கூறினார். மேலும், ரிஷப் பன்டை அவரது வழியிலேயே விளையாட விடவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.