ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதற்காக இங்கிலாந்து அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதோடு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் போட்டியின்போது இங்கிலாந்து அணி பந்துவீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதற்காக அந்த அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதாவது போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5 சதவீதம் புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது.