இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரரான ஜிம்மி கிரீவ்ஸ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரரான ஜிம்மி கிரீவ்ஸ்(வயது 81) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை இவர் மரணமடைந்தார். இங்கிலாந்து அணிக்காக 57 போட்டிகளில் விளையாடிய ஜிம்மி கிரீவ்ஸ் 44 கோல்கள் அடித்துள்ளார் அதோடு கடந்த 1966-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இவர் இடம்பெற்றிருந்தார் ,
இதையடுத்து டோட்டன்ஹாம் ஹாட்ஸ்புர் கிளப்புக்காக நீண்டகாலம் விளையாடிய ஜிம்மி அந்த கிளப்க்காக அதிக கோல்கள் அடித்த பெருமைக்குரியவர் ஆவார்.இவருடைய மறைவிற்கு இங்கிலாந்து கால்பந்து வீரர்கள், பிரபலங்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.