Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்…. அட்டவணையில் மாற்றம் இருக்காது …!!!

ஐபில் தொடருக்காக , இங்கிலாந்து டெஸ்ட் தொடரில்  மாற்றம் செய்யுமாறு பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது .

வருகின்ற ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் முடிகிறது இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடக்கிறது

இந்த டெஸ்ட் தொடரில்   செப்டம்பர் 7 ம் தேதிக்குள் போட்டியை முடிக்குமாறு, பிசிசிஐ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக்கொண்டது . டெஸ்ட் தொடர் முன்கூட்டியே முடிந்தால் ,ஐபில் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை செப்டம்பர்-அக்டோபரில் மாதத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்திருந்தது .ஆனால் இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ள வில்லை என்றும், போட்டியை  ஒளிபரப்பும்   நிறுவனத்தால் அட்டவணையை மாற்றி வைக்க விரும்பவில்லை. இதனால் டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் இருக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரவில்லை .

Categories

Tech |