மும்பையில் உள்ள ஆங்கில பத்திரிகையான வோக் சார்பில் பாலிவுட் பிரபலங்களுக்கு பேஷன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவர் மனைவி கவுரிகான் தம்பதிகள் சிறந்த தம்பதிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இதில் நடிகர்களில் ஹிருத்திக் ரோசனும், அக்சய் குமாரும் இந்த ஆண்டுக்கான ஸ்டைலிஸ் விருதுகளைப் பெற்றனர். நடிகைகளில் விராட்கோலி மனைவியான அனுஷ்கா சர்மாக்கு ஸ்டைல் ஐகன் விருது வழங்கப்பட்டது.
இதில் ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூருக்கும், நடிகை கத்ரினா கைப்க்கும் மற்றும் பாலிவுட் இயக்குனரான கரண ஜோகருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்களும், தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் கலந்துக் கொண்டனர்.