ஸ்ரீலங்கா லெஜெண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து லெஜெண்ட்ஸை வீழ்த்தியது.
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்று விளையாடும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் என 8 அணிகளின் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்..
இந்நிலையில் நேற்று இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கா லெஜெண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஆன போட்டி போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா லெஜெண்ட்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பில் முஸ்டர்ட் மற்றும் கேப்டன் இயன் பெல் களமிறங்கினர்.
அதன்பின் இசுரு உதான வீசிய 6ஆவது ஓவரில் பில் முஸ்டர்ட் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து டி சில்வாவின் 9ஆவது ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் இயன் பெல்லும் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.. அதன்பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 19 ஓவரில் ஆல் அவுட் ஆன இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்ரீலங்கா லெஜெண்ட்ஸ் அணியில் அதிகபட்சமாக சனத் ஜெயசூரியா 4 விக்கெட்டுகளும், குலசேகரா மற்றும் டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதை எடுத்து களமிறங்கிய இலங்கை லெஜெண்ட்ஸ் அணி 14.3 ஓவரில் 3 விக்கெட் இழந்து 79 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தில்ஷான் முனவீர 24 ரன்களும், உபுல் தரங்கா 23 ரன்களும் எடுத்தனர். மேலும் திலகரத்ன தில்ஷான் 15 ரன்களும், ஜீவன் மெண்டிஸ் 8* ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர்.. சமீரா சில்வா 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.. 4 ஓவர் வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய ஜெயசூரியா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.