Categories
அரசியல்

அட!… இங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடினால் சூப்பரா இருக்குமா?…. அப்படி என்ன ஸ்பெஷல்….!!!!

நாடு முழுவதும் அமைதியான மற்றும் இணக்கமான பண்டிகையாக கிறிஸ்துஸ் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது புத்தாடை அணிந்து, கேக்குகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்வர். இதற்கிடையில் கிறிஸ்துமஸ் நேரத்தில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால், அதற்கான சிறந்த இடங்களை நாம் பார்ப்போம்.

பாண்டிச்சேரி

பிரெஞ்சுக்காரர்களால் தாக்கம் செலுத்தப்பட்ட கிறிஸ்துமஸைக் கொண்டாட இது சிறந்த இடமாக உள்ளது. இது யூனியன் பிரதேசம் என்பதால் நீங்கள் பண்டிகை சீசனை கொண்டாட சரியான இடமாக இருக்கும் என கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அங்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

டாமன் மற்றும் டையூ

குஜராத்தின் கடற்கரையில் அமைந்திருக்கும் டாமன் மற்றும் டையூ கிறிஸ்துமஸ் சீசனின்போது அழகாக அலங்கரிக்கப்படுகிறது. கொரின்டினோ போன்ற போர்த்துகீசிய நடன வடிவங்களைக்கூட காணக்கூடிய பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பிரகாசமான விளக்குகள் இரவு வானத்தை பிரகாசமாக்குகிறது. இது பண்டிகை காலங்களில் இந்த இடத்தை தனித் தனியாகக் காட்டுகிறது. செயின்ட் பால் தேவாலயம், சே கதீட்ரல் மற்றும் ஜெபமாலை தேவாலயம் போன்றவை அதிகம் பார்வையிடப்பட்ட தேவாலயங்கள் ஆகும்

Categories

Tech |