Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ENGvNZ : பட்லர், ஹேல்ஸ் அதிரடி அரைசதம்…. நியூசிலாந்துக்கு 180 ரன்கள் இலக்கு.!!

நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இந்நிலையில் இன்று குரூப் 1 பிரிவிலுள்ள இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் களமிறங்கி நல்ல துவக்கம் கொடுத்தனர். முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி. ஹேல்ஸ்  அற்புதமாக ஆடி அரைசதம் அடித்தார். அதன் பின் சான்ட்னர் வீசியோ 11 வது ஓவரில் அலெக்ஸ் ஹேல்ஸ்  40 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து வந்த மொயின் அலி 5 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் லிவிங்ஸ்டன் – ஜாஸ் பட்லர் இணைந்து ஆடினர். பெர்குசன் வீசிய 13 வது ஓவரில் ஜாஸ் பட்லர் ஒரு கேட்ச் கொடுத்தார். லெக் சைட் திசையில் எல்லைக்கோடு அருகே வந்ததை மிட்செல் விட்டு விட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட ஜாஸ் பட்லர் அதிரடியாக அரைசதம் அடித்தார். அதன்பின் லிவிங்ஸ்டன் 20 ரன்கள் எடுத்த நிலையில் பெர்குசன் வீசிய 18-வது ஓவரில் அவுட் ஆனார்.. தொடர்ந்து டிம் சவுதி வீசிய 19ஆவது ஓவரில் ஹாரி புரூக் 7 ரன்னில் அவுட் ஆனார்.

அதே ஓவரில் 47 பந்துகளில் (7 பவுண்டரி, 2 சிக்ஸர்) 73 ரன்கள் எடுத்திருந்த ஜாஸ் பட்லர் ரன் அவுட் ஆனார். பெர்குசன் வீசிய லாஸ்ட் ஓவரில் பென் ஸ்டோக்ஸ் 7 ரன்னில் அவுட் ஆனார். கடைசியில் சாம் கரன் 6*, டேவிட் மலான் 3* ரன்னிலும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளும், டிம் சவுதி, சான்ட்னர், இஷ் சொதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.. இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கி ஆடி வருகிறது.

Categories

Tech |