இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது
கடந்த மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் லீக் சுற்று முடிந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்தன. அரை இறுதியில் இந்தியாவை நியுசிலாந்து அணியும், ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியும் வென்றது.
இந்நிலையில் இறுதி போட்டியில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக சற்று தாமதமாக தொடங்குகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக நிக்கோக்லசும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். உலக கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.