Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW vs INDW : முதல் ஒருநாள் போட்டி …. இங்கிலாந்து அணி வெற்றி ….!!!

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி பிரிஸ்டலில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மந்தனா 10 ரன்களிலும் ,  ஷபாலி  15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகளை இழக்க மறுபுறம் கேப்டன் மிதாலி ராஜ் நிலைத்து ஆடினார்.

அரைசதம் கடந்த மிதாலி ராஜ் 72 ரன்களில் ஆட்டமிழந்தார் .இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய இங்கிலாந்து  அணி  202 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது . இதில் அதிகபட்சமாக டாமி பீமோன்ட் 87 ரன்களும் , நதாலி சிவெர் 74 ரன்களும் எடுத்து  இருவரும் அரைசதம் கடந்தனர். இறுதியாக 34.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணி  வெற்றியை கைப்பற்றியது. இதன் மூலம்  1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

Categories

Tech |