Categories
தேசிய செய்திகள்

iNCOVACC: இனி கொரோனா பயம் குறைய வாய்ப்பு இருக்கு!…. நாசி வழி சொட்டு மருந்துக்கு ஒப்புதல்….!!!!!

சீன நாட்டில் அதிக அளவில் பரவிவரும் பிஎப்.7 மாறுபாடு, இந்தியாவில் இதுவரையிலும் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. பிஎப்.7 நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிஎப்7 மாறுபாடு சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய பிற நாடுகளிலும் பரவி வருகிறது. பாரத் பயோடெக்கின் நாசி வழி கோவிட் தடுப்பூசிக்கு இந்திய அரசானது ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதாவது, பாரத் பயோடெக்கின் iNCOVACC என்ற மூக்கு வழியாக சொட்டு மருந்து உட்செலுத்தும்  தடுப்பு மருந்து இந்தியாவில் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. தற்போது உலகில் அதிகரித்து வரும் கோவிட் இந்தியாவில் மீண்டுமாக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறையானது பல அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் CoWIN செயலியில் பூஸ்டர் டோஸ் கிடைக்கிறது. பாரத் பயோடெக் உருவாக்கிய இன்ட்ராநேசல் கோவிட் தடுப்பூசி (intranasal Covid vaccine), இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகியது. இவை நாசி தடுப்பு மருந்தாக தனியார் சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும்.

Categories

Tech |