புதுச்சேரியில் உள்ள ஜிம்பர் மருத்துவமனை மத்திய அரசு நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கொரோனாவிற்கு பிறகு ஒவ்வொரு பிரிவிலும் 25 நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜிம்பர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் நோயாளிகள் தங்களது ரேஷன் கார்டு கொண்டே பதிவு செய்ய வேண்டும்.
இந்நிலையில் தற்போது ஜிம்பர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிகிச்சைக்காக வரும் ஏழைகள் பெயர்களை பதிவு செய்யும் போது குடும்ப அட்டை கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. பொது வார்டு சிகிச்சை பிரிவில் மாத வருமானத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும், வெளிப்புற சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மருந்து தருவதில் பழைய முறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.