தமிழகம் அனைத்து பசுமையான வன வளங்கள் உள்ள மாநிலமாக திகழ்கிறது. அதனால் தமிழகத்தில் பல பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக காணப்படுகிறது. அதில் கன்னியாகுமரி, ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத்தலங்களில் தமிழர்கள் மட்டுமன்றி உலக அளவில் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் பகுதியாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு பல மாநிலங்களிலிருந்து கூட்டம் கூட்டமா வாகனங்களில் வந்து தங்கி சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடி செல்கின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் தமிழகத்திற்கு சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களுக்கு மாநில வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி சுற்றுலா பயணிகள் வரும் பேருந்துகள் இனி தமிழகத்தில் வரும்போது கண்டிப்பாக மாநில வரி செலுத்தவேண்டும்.
அதுமட்டுமில்லாமல் அந்த சுற்றுலா வாகனம் அகில இந்திய அளவில் உரிமம் பெற்று இருந்தாலும் கூட தமிழகத்திற்குள் வரும்போது கண்டிப்பாக மாநில வரி செலுத்தப்பட வேண்டும். மேலும் மாநில அரசுகள் விதிக்கும் எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுத்துக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.