அமெரிக்காவில் டிக் டாக், விசாட் உட்பட 8 சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை அதிபர் ஜோ பைடன் திரும்பப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு மக்களின் பாதுகாப்பிற்காக டிக் டாக், விசாட் உட்பட 8 சமூக வலைத்தளங்களுக்கு , முன்னாள் அதிபர் டிரம்ப் தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் தற்போதைய அதிபரான ஜோ பைடன் பதவியேற்றவுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். அத்துடன் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களையும் அவர் கொண்டு வந்துள்ளார்.
அதன்படி முன்னாள் அதிபர் டிரம்ப் டிக் டாக், விசாட் உட்பட 8 சமூக வலைத்தளங்களுக்கு தடை உத்தரவை அதிபர் ஜோ பைடன் திரும்பப் பெற்றுள்ளார். மேலும் டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக, மக்களின் தகவல்கள் திருடப்படுவதாக முந்தைய அரசு குற்றம் சாட்டியிருந்தது .எனவே இந்த சமூக வலைத்தளங்களுக்கான புதிய விதிகளை உருவாக்குவதற்கு, விரிவான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.