Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இனிமேல் இழக்குறதுக்கு ஒன்னு இல்ல”….! ‘என்னோட நேரமே சரியில்ல’ …! வேதனையில் குல்தீப் யாதவ் …!!!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பவுலராக விளங்கி வந்த  குல்தீப் யாதவ், தற்போது  மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் .

வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன்  மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக  பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இந்தத் தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதுகுறித்து குல்தீப் யாதவ் அளித்த பேட்டியில் இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சியாக இருந்தாலும், இதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில், இருப்பதாக   கூறியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் சிறப்பாக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு  2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற  டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடும் அணியில் இடம்பெறாமல் இருந்தார். அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட குல்தீப் யாதவ், அந்தப் போட்டியில் சரியாக விளையாடாததால், தற்போது அவர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ஓராண்டு காலமாக கொரோனா  பாதிப்பால் என்னால் தொடர்ந்து போட்டிகளில், ஈடுபட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இதனால் நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் கூறினார். அதோடு தற்போது இந்த சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் ,குல்தீப் யாதவ் இடம்பெற்றிருந்தார். ஆனால் அந்த போட்டியிலும் ஒருமுறைகூட குல்தீப் யாதவ் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு ,அவருக்கு வழங்கப்படவில்லை. என்னை அணியில் விளையாட வைக்காமல்,  அணி நிர்வாகம் எடுத்த இந்த முடிவு எனக்கு அதிர்ச்சியை அளித்தது. பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த வீரர்கள் அனைவரும் சவால்கள் நிறைந்த போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நான் எந்த ஒரு சவாலும் இல்லாமல், வெளியே அமர்ந்திருந்ததாக வருத்தத்துடன் கூறினார்.

Categories

Tech |