இனிமேல் டாக்டர்கள் எழுதும் மருந்து சீட்டில் மருந்துகளின் பெயரை தெளிவாகப் புரியும்படி பெரிய எழுத்துகளில் எழுத வேண்டுமென ஓடிசா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக அனைத்து டாக்டர்களும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மருந்து சீட்டில் உள்ள மருந்துகளின் பெயர்கள் தெளிவாக புரியவில்லை என்பதால், சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது என குற்றம் சாட்டி வழக்கு ஒன்று நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி பாலிக் ரகி தலைமையிலான அமர்வு. மருந்து சீட்டில் உள்ள பெயர்களை பலமுறை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருப்பதாக தெரிவித்தது. மேலும் இனிமேல் மருந்து சீட்டு பிரேத பரிசோதனை அறிக்கைகள். காயங்கள் குறித்து அறிக்கை ஆகியவற்றில் புரியும்படி தெளிவாக பெரிய எழுத்துகளில் டாக்டர்கள் எழுத வேண்டும் என தெரிவித்தன.
இது தொடர்பாக உடனடியாக அனைத்து டாக்டர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை மாநில அரசு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இது டிஜிட்டல் உலகமாக இருப்பதால், மின்னணு சாதனங்கள் மூலமாக தெளிவான அச்சி பிரதிகளை எடுத்து நோயாளிகளுக்கான மருந்து சீட்டை தரலாம் என்று ஒடிசா உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு ஒடிசாவில் செயல்படும் மருத்துவர்களுக்கு மட்டும் தான் என்றாலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களும் இதை பின்பற்ற வேண்டும் என்பதை பொதுநல ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.