Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனியும் CSK அப்படி செஞ்சா…! தோனி விளையாடுறது கஷ்டம்… புதிய சிக்கலால் ரசிகர்கள் கவலை …!!

சிஎஸ்கே அணி நேற்று நடந்த போட்டியை போலவே ,வரவுள்ள போட்டிகளில் பவுலிங் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில்,கேப்டன் தோனிக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். 

14வது ஐபிஎல் தொடர் போட்டியில் 2வது லீக் ஆட்டமானது,நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. போட்டியின் பரபரப்பான இறுதிகட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி, வெற்றி பெற்றது. நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி பவுலிங் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்ட காரணத்திற்காக ,அணியின் கேப்டனான தோனிக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதே தவறை 2வது முறையாக  செய்தால், கேப்டனுக்கு ரூபாய் 24 லட்சம் அபராதமாகவும் , அணியில் உள்ள வீரர்களுக்கு தலா  6 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது போட்டி கட்டணத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும். மூன்றாவது தடவையாக இதே தவறு மேலும் தொடர்ந்தால் ,கேப்டனுக்கு ரூபாய் 30 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதோடு , ஒரு போட்டியில் அவர் விளையாட தடை விதிக்கப்படும். அதோடு அணியில் உள்ள வீரர்களுக்கு தலா ரூபாய் 12 லட்சம் அபராதம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்படும் என்று ஐபிஎல் விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி ,இன்னும்  13 போட்டிகளில் விளையாட உள்ளது. எனவே நேற்று நடந்ததைப் போன்று ,வருகின்ற போட்டிகளிலும் சிஎஸ்கே பவுலிங் செய்வதற்கு ,அதிக நேரத்தை எடுத்துக் கொண்டால், சிஎஸ்கே அணியின் கேப்டனுக்கும், அணியில் பங்குப்பெற்றுள்ள வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுவதோடு, அணியின் கேப்டன் தோனி  ஒரு போட்டியில் விளையாடுவதற்கு  தடை விதிக்கப்படும்.இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |