Categories
தேசிய செய்திகள்

அனுபவிங்கள் “விதி என்பது வல்லுறவு போன்றது” MP மனைவி சர்சை பதிவு …!!

மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தையும் பாலியல் வல்லுறவையும் இணைத்து கேரள எம்.பி.யின் மனைவி இட்டுள்ள ஃபேஸ்புக் பதிவு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கேரளாவில் பல்வேறு இடங்களில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக முக்கிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹைபி ஈடனின் மனைவி அண்ணா லிண்டா ஈடனின் ஃபேஸ்புக் பதிவுதான் இப்போது ஹாட்-டாபிக்காகியுள்ளது.அண்ணா லிண்டா ஃபேஸ்புக் பக்கத்தில் தனது மகளின் உடைமைகளை ஒரு வெள்ளத்திலிருந்து மீட்கும் காணொலியையும் தனது கணவர் ஐஸ்கிரீம் சாப்பிடும் காணொலியையும் பதிவிட்டிருந்தார்.

அதில் “விதி என்பது வல்லுறவு போன்றது, அதை உங்களால் எதிர்க்க முடியவில்லை என்றால் அனுபவியுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.இந்தப் பதிவு பெண்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இதன் காரணமாக அந்தப்பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து அவர் நீக்கிவிட்டார்.

மற்றொரு பதிவில் தனது முந்தைய பதிவுக்கு வருத்தம் தெரிவித்த அவர், தனது தந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதையெல்லாம் தாண்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்த முயலுவதாகவும் தெரிவித்தார்.மேலும், மக்கள் பிரதிநிதியின் மனைவியாக மக்கள் படும் வேதனையையும் சிரமங்களையும் புரிந்துகொண்டதாகவும் தான் எப்போதும் மக்களுடன் இருப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |